தொடர் வண்டி அஞ்சல் சேவை ( RMS) , திருச்சிராப்பள்ளியில் முதுநிலை கண்காணிப்பாளராக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர் திரு ந.சி.பாலகிருஷ்ணன்
அவர்கள். இவருடைய சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆலங்குடி தாலுகாவில் உள்ள
கைக்குறிச்சி என்னும் கிராமம் ஆகும். சிறந்த கவிஞரான இவர் “கவிஞர் பாசி” என்ற பெயரில் கவிதைகளை
படைத்து வருகிறார். இவர் தனது கவிதைகளைத் தொகுத்து “கவிக்கதிர்” என்ற நூலை
வெளியிட்டுள்ளார்.
நமது சித்தார்த்தா அறக்கட்டளை கட்டடத் திறப்புவிழாவை வாழ்த்தி ஒரு வாழ்த்து
மடலை அழகு தமிழில் படைத்துள்ளார்! அந்த கவிதையின் போட்டோ வடிவம் இங்கே (கீழே)
பொன்னானநாள் இன்று பொன்னானநாள்!
அந்த கவிதையின் எழுத்து வடிவம் இங்கே.(கீழே)
சித்தார்த்தா அறக்கட்டளை கட்டிடத் திறப்புவிழா வாழ்த்து மடல்
தீரன் நகர் (வடக்கு) திருச்சிராப்பள்ளி – 620
009
நாள்: 14.09.2014 ஞாயிற்றுக் கிழமை நேரம்: காலை: 10 மணி
பொன்னானநாள் இன்று பொன்னானநாள்!
பொறியாளர் மருத்துவர் வழக்கறிஞர்
பேராசிரியர் கல்வியாளர்கள் கண்மணிகள்
பேரவாக் கனவுகனிந்த பேரின்பநாள்! – இன்று
சித்தார்த்தா அறக்கட்டளையின் இன்பநாள்!
சித்தமெல்லாம் குடிகொண்ட சிந்தனையாளர்களின்
சிறப்பான பணியினாலும் உழைப்பினாலும்
சிறந்து நிற்கும் வளர்ந்து நிற்கும் கட்டிடத்திறப்புவிழா! – இன்று
பெருவாரியான பெருந்தகைகள் பங்களிப்பில்
பெருமைகாணும் திருவிழா! பேரின்ப மனைவிழா!
பேரும் புகழும்கொண்ட நல்லோர்களின் கரங்களின்
பேராசியோடும் வாழ்த்தோடும்திறக்கப்படும் மனைவிழா – இன்று
கட்டிடம்மட்டும் திறக்கப்படவில்லை என்றும்
கட்டிக்கிடந்த மனங்களும் திறக்கப்படும் பெருவிழா!
கட்டிலடங்கா கல்விச்செல்வம் கொண்ட தலைவர்களின்
கட்டியம் கூறும் காவியவிழா! ஓவியவிழா! – இன்று
கற்பி ஒன்றுசேர் புரட்சிசெயென்ற புரட்சியாளரின்
நற்கனவும் சித்தார்த்தாவின் கனிவுமிகு அன்பும்
ஒருங்கே அமைந்த இந்த அறக்கட்டளையின் விழா!
ஒருபோதும் கனவாக இல்லாமல்
காலத்தை வென்று நிற்கும் விழா! – இன்று
நல்லதொரு தலைமையில் அறங்காவலர்கள்
நல்மனம் படைத்தோர்களின் ஆதரவோடு அரிய
நல்ல செயல்புரிந்த செயல் வீரர்களை நாம் வணங்கிடுவோம்
நல்ல முறையில் கட்டிடம் மேலும் மேலும் வளர வாழ்த்திடுவோம் – இன்று
கவிஞர் பாசி,
சி.பாலகிருஷ்ணன் M.A.,B.L.,
IPoS.,
11/1 வெற்றி இல்லம், ஸ்டாலின் நகர்,
எடமலைபட்டி புதூர் அஞ்சல்
திருச்சி – 620 012 செல்: 9442549926
No comments:
Post a Comment