(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Friday 6 December 2013

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 58-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் (06.12.2013)



அன்புடையீர் வணக்கம்!

நமது சித்தார்த்தா அறக்கட்டளை, திருச்சி சார்பாக அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 58-ஆவது  நினைவுநாள் அஞ்சலி 06.12.2013 வெள்ளிக் கிழமை அன்று முற்பகல் அனுசரிக்கப்பட்டது.  .

டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை:

முன்னதாக டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு,  , காலை திருச்சியிலுள்ள அவரது சிலைக்கு  நமது அறக்கட்டளை சார்பாக,  கவிமாமணி பொறியாளர் சாந்த.முத்தைய்யா அவர்களின் ஆலோசனைப்படி, துணைத் தலைவர் டாக்டர் என்.சின்னையா  அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது



நினைவு அஞ்சலி கூட்டம்:

மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்) திருச்சி, (கருமண்டபம் அருகில்) அமையப் பெற்றுள்ள நமது சித்தார்த்தா அறக்கட்டளையின் புதிய கட்டிடத்தில் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது

கூட்டத்திற்கு டாக்டர் என்.சின்னையா  அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பெரியவர் S துரைசாமி (Joint Director of Rural Administration – Retd ) அவர்கள் கலந்து கொண்டார்.
கூட்டம் தொடங்கியவுடன், முதற்கண் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு இன்று மரணம் அடைந்த தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது.

பின்னர் அண்ணல் அம்பேத்கர் படத்திற்கு  மாலை அணிவித்தல் தொடங்கி நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியர் A. நல்லுசாமி அவர்கள் வந்தவர்களை அறிமுகப்படுத்தி வரவேற்று பேசினார். கூட்டதிற்கு வந்து இருந்தவர்களும் தங்களது கருத்துக்களை கூற, சேர்மன் M சந்திரகாசன் அவர்கள் நன்றி கூறினார்.

  







 மதிய உணவும் நிறைவும்:
 
வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு தந்து விருந்தோம்புதல் செய்யப்பட்டது. மதிய உணவு நிகழ்ச்சிக்குப் பிறகு அஞ்சலி நிகழ்ச்சி நிறைவுற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் A. நல்லுசாமி அவர்கள் மற்றும்  IOB மேலாளர் ( ஓய்வு) திரு K சின்னசாமி B.Sc ( Agri ) (அறங்காவலர். சித்தார்த்தா அறக்கட்டளை ) அவர்கள் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தார்கள். நிகழ்ச்சியை புகைப் படங்கள் எடுத்தல் மற்றும் இண்டர்நெட்டில் இணைத்தல் முதலானவற்றை தி தமிழ் இளங்கோ அவர்கள் செய்தார்.





நினைவஞ்சலி நிகழ்ச்சியில், அறக்கட்டளையின் நிர்வாகிகள் இணைச்செயலர் திரு T K வீராசாமி, பொருளாளர் திரு A குருசாமி ஆகியோருடன், அறக்கட்டளையின் அறங்காவலர்கள் திருவாளர்கள் M சந்திரகாசன், ஆதி பெரு பழனியப்பன், பேராசிரியர் A நல்லுசாமி, அண்ணா ஏகாம்பரம், A K ராமச்சந்திரன், S நம்பியார், M ஜெகநாதன், தி தமிழ் இளங்கோ, K சின்னசாமி  ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் சிவபிச்சை, தாளக்குடி சுப்ரமணியன்,ஜெயபால் (LIC), விடிவெள்ளி பாண்டியன்,V பெர்னாட்ஷா (முசிறி), M அமுதன், திருமதி ஜானகி நல்லுசாமி, திருமதி சந்திரகாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 


முக்கிய அறிவிப்பு: 

நமது அறக்கட்டளை சார்பாக  FACE BOOK – இல்  SIDDHARTHA TRUST TRICHY  என்ற பெயரில் இணையதளம் கணக்கு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.  FACE BOOK இல் இருப்பவர்களை எமது தளத்தைப் பார்வையிட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்!






Wednesday 4 December 2013

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 58-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் – அழைப்பிதழ்




பேரன்புடையீர் வணக்கம்!

நாளது 06.12.2013 வெள்ளி காலை 10.00 மணியளவில், திருச்சிராப்பள்ளி அரிஸ்டோ ஹோட்டல் ரவுண்டானாவில், அமையப்பெற்றுள்ள அண்ணல் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியிலும்,

அதன் பின்னர், காலை 11.00 மணியளவில், மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்) திருச்சி,(கருமண்டபம் அருகில்) அமையப் பெற்றுள்ள சித்தார்த்தா அறக்கட்டளையின் புதிய கட்டடத்தில் நடைபெற உள்ள நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியிலும்,

அதனைத் தொடர்ந்து அறக்கட்டளையின் , எதிர்காலத் திட்டம் பற்றிய தொலை நோக்குடன் கூடிய கலந்துரையாடலிலும். பங்கேற்று தங்களின் அரிய யோசனைகளை வழங்கிட வேண்டுகிறோம்.

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுஎன்ற தாரக மந்திரத்தின்படி  உணர்வுடன் “ஒன்று கூடுவோம்! வெனறு வாழ்வோம்

தங்கள் வருகை எங்கள் பெருமை!

தலைவர் மற்றும் அறங்காவலர்கள்
சித்தார்த்தா அறக்கட்டளை,
திருச்சிராப்பள்ளி.1
நாள்: 04.12.2013











Thursday 5 September 2013

இன்று ( 05.09.2013 – வியாழன்) எடுத்த புகைப்படங்கள்.




அன்புடையீர் வணக்கம்!
தங்களின் மேலான ஆதரவுடன், நமது அறக்கட்டளையின் கல்வி மற்றும் பல்நோக்கு சமுதாயக்கூடம் கட்டிடப் பணிகள் நிறைவுறும்  நிலையில் உள்ளது. இன்று ( 05.09.2013 வியாழன்) முற்பகல் அங்கு எடுத்த புகைப்படங்கள்.


 


















முக்கிய அறிவிப்பு: 

நமது அறக்கட்டளை சார்பாக  FACE BOOK – இல் https://www.facebook.com/siddharthatrust.trichy
என்ற பெயரில் இணையதளம் கணக்கு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.  FACE BOOK இல் இருப்பவர்களை எமது தளத்தைப் பார்வையிட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்!




Friday 17 May 2013

முக்கிய நோக்கங்களும் செயற்திட்டங்களும்



                                               சித்தார்த்தா அறக்கட்டளை
                                                            (பதிவு எண் 874/2006)
                                      திருச்சிராப்பள்ளி

                         முக்கிய நோக்கங்களும் செயற்திட்டங்களும்


1. கல்வியிலும் பொருளாதாரத்திலும் சமூக   அமைப்பிலும்     தாழ்ந்திருக்கும் நலிவுற்ற மக்களின் மேம்பாட்டுக்காக, கலை அறிவியல் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி, செவிலியர் பயிற்சி, ஆசிரியர் பயிற்சி, கணினிப் பயிற்சிக் கூடங்கள், பொறியியல், மருத்துவம், வேளாண் துறைகளுக்கான கல்வியூட்டும் நிறுவனங்கள் ஆகியவற்றை நிறுவி அவற்றின் வாயிலாக கல்வியறிவையும், வேலை வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பணிகளை மேற்கொள்ளுதல்.

2. கிராமப்புறங்களுக்குச் சென்று மாணவ மாணவியருக்கும், நலிந்த மக்களுக்கும், அரசின் நலத் திட்டங்கள் மூலமாக சுயதொழில் தொடங்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

3. அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் சித்தார்த்தா அறக்கட்டளையும் இணைந்து மக்கள் நலத் திட்டப் பணிகளை மேற்கொள்ளுதல்.

4. மதிப்பெண் குறைந்த கல்வித்திறன் குறைந்த மாணவ மாணவியருக்கு தனிப்பயிற்சி வகுப்புகள், பகுதிநேர பயிற்சி வகுப்புகளாக சித்தார்த்தா அறக்கட்டளை நடத்தி வருகிறது. அப்பணியை மென்மேலும் விரிவுபடுத்தி முழுநேரப் பயிற்சி, தொலைதூரக் கல்விப் பயிற்சி வகுப்புகளாக செயற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளுதல்.

5. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்குத் தங்கும் விடுதிகளும், உணவில்லங்களும் அமைத்துக் கொடுத்தல், ஏற்கனவே நடத்தி வருகின்ற தாளாளர்களை ஊக்குவித்து தேவைப்படும் நல்லுதவிகளைச் செய்து கொடுத்தல். ஆங்கு பயிலுவோர்க்கு மேற்படிப்பு மர்றும் வேலை வாய்ப்புகள் பெறுவதற்கான “வழிகாட்டும் பயிற்சி நல்கும் நிறுவனங்கள் மூலமாக பயிற்சி வகுப்புகள் நடத்துதல். நலிந்த மாணவ மாணவியருக்கு உதவித்தொகை வழங்குதல்.

6. அரசு உதவித் திட்டங்கள் மூலமாக சிறிய தொழிற்கூடங்கள், பயிற்சிப் பட்டறைகள் ஏற்படுத்தி உற்பத்தி, வணிகம், சந்தை விற்பனை போன்ற துறைகளில் வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்துதல்.

7. பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு பேச்சுப்போட்டி, இசைப்போட்டி, கதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல்.

8. கலை இலக்கியப் பணிகளில் ஈடுபட்டுத் தொண்டாற்றும் ஆசிரியர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள் போன்றவர்களின் சமூகப்பணி மென்மேலும் தொடரும் வகையில் உதவித்தொகை வழங்கி ஊக்குவித்தல்.. எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்களின் படைப்புகள் வெளிவருவதற்கான உதவிகளைச் செய்தல்.

9. ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் நிறுவி மக்கட் பணியாற்றுதல்.

10. அமைப்பு முறை:

சித்தார்த்தா அறக்கட்டளை சமூகசேவை ஆர்வலர்கள் பங்கேற்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணி ஓய்வு பெற்றவர்கள், தலைவர் உட்பட பொறியாளர்கள்- நால்வர், மருத்துவர் ஒருவர், மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவர், உதவி ஆட்சியர் இருவர், கூட்டுறவுத்துறை இணை இயக்குநர்கள் இருவர், பேராசிரியர் ஒருவர், மண்டல நன்னடத்தை அலுவலர் ஒருவர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஒருவர், தொழிலதிபர்கள் மூவர், மத்திய தொலை தொடர்புத்துறை அலுவலர் ஒருவர்,  வங்கி அலுவலர் ஒருவர், ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலர் ஒருவர், - ஆகியோர் இந்த அறக்கட்டளையில் தற்போது உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்கள் எண்ணிக்கை 50 முதல் 100 வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

சித்தார்த்தா அறக்கட்டளையின் நோக்கங்களும் செயற் திட்டங்களும் செவ்வனே நிறைவேறி வெற்றிபெற சமூக ஆர்வலர்கள் அனைவரும் தங்கள் நல்லாதரவினை அளித்திட வேண்டும் என, பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

                                          இங்ஙனம்,
                                  சித்தார்த்தா அறக்கட்டளை
                                       திருச்சிராப்பள்ளி


முக்கிய அறிவிப்பு:
நமது அறக்கட்டளை சார்பாக  FACE BOOK – இல் https://www.facebook.com/siddharthatrust.trichy
என்ற பெயரில் இணையதளம் கணக்கு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.  FACE BOOK இல் இருப்பவர்களை எமது தளத்தைப் பார்வையிட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்!


                                                                  

Monday 15 April 2013

டாக்டர் அம்பேத்கர் 123 -ஆவது பிறந்த நாள் விழா ( 14.04.2013 )



அன்புடையீர் வணக்கம்!

தங்களின் மேலான ஆதரவுடன், நமது அறக்கட்டளையின் கல்வி மற்றும் பல்நோக்கு சமுதாயக்கூடம் தரைத்தளம் கட்டி முடியும் நிலையில் உள்ளது. இத்தருணத்தில் புதிய கட்டிடத்தை அனைவரும் காணும் வாய்ப்பாகவும் அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 123 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் 14.04.2013 ( ஞாயிறு ) அன்று கட்டிட வளாகத்தில் கலந்துரையாடல் விழா கூட்டம் நடைபெற்றது.


டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை:

முன்னதாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு,  14.04.2013 ஞாயிறு காலை திருச்சியிலுள்ள அவரது சிலைக்கு  நமது அறக்கட்டளை சார்பாக கவிமாமணி பொறியாளர் சாந்த.முத்தைய்யா அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது



கலந்துரையாடல் கூட்டம்:

நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் புத்தம் சரணத்துடன் தொடங்கியது. பேராசிரியர்  M.கோவிந்தராஜ் ( கணினித்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ) அவர்கள்,  சித்தார்த்தா அறக்கட்டளை பற்றிய ஒரு குறு ஆவணப்படம் ஒன்றை பவர் பாயிண்ட் ( POWER POINT ) முறையில் உருவாக்கி வைத்து இருந்தார். அந்த படத்திறகான வெண் திரையில் உள்ள குத்து விளக்கை நமது தாய்மார்கள் கம்ப்யூட்டர் மவுஸ் வழியாக ஒளி ஏற்றி வைத்தனர். பின்னர் அரங்கினுள் புத்தர், டாக்டர் அம்பேத்கர் படங்களுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன. அதன் பின்னர் திரையில் சித்தார்த்தா அறக் கட்டளை பற்றிய குறு ஆவணப்படம் திரையிடப்பட்டது. பேராசிரியர் A. நல்லுசாமி அவர்கள் ஆவணப்படத்திற்கான விளக்கவுரையை தந்தார்.



























மதிய உணவு:

வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு தந்து விருந்தோம்புதல் செய்யப்பட்டது. YRC  KITCHEN  கேட்டரிங் சர்விஸ்  அமைப்பினர் சிறப்பான முறையில் சமையல் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.



 








நிறைவு:

மதிய உணவு நிகழ்ச்சிக்குப் பிறகு விழா இனிதே நிறைவுற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் A. நல்லுசாமி அவர்கள் மற்றும்  IOB மேலாளர் ( ஓய்வு) திரு K சின்னசாமி B.Sc ( Agri ) (அறங்காவலர். சித்தார்த்தா அறக்கட்டளை ) அவர்கள் , ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தார்கள்.




முக்கிய அறிவிப்பு: 
நமது அறக்கட்டளை சார்பாக  FACE BOOK – இல்  SIDDHARTHA TRUST TRICHY  என்ற பெயரில் இணையதளம் கணக்கு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.  FACE BOOK இல் இருப்பவர்களை எமது தளத்தைப் பார்வையிட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்!