சித்தார்த்தா அறக்கட்டளை
(பதிவு எண் 874/2006)
திருச்சிராப்பள்ளி
முக்கிய நோக்கங்களும் செயற்திட்டங்களும்
1.
கல்வியிலும் பொருளாதாரத்திலும் சமூக அமைப்பிலும்
தாழ்ந்திருக்கும் நலிவுற்ற மக்களின் மேம்பாட்டுக்காக, கலை அறிவியல்
பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி, செவிலியர் பயிற்சி, ஆசிரியர் பயிற்சி,
கணினிப் பயிற்சிக் கூடங்கள், பொறியியல், மருத்துவம், வேளாண் துறைகளுக்கான
கல்வியூட்டும் நிறுவனங்கள் ஆகியவற்றை நிறுவி அவற்றின் வாயிலாக கல்வியறிவையும்,
வேலை வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பணிகளை மேற்கொள்ளுதல்.
2. கிராமப்புறங்களுக்குச் சென்று மாணவ மாணவியருக்கும்,
நலிந்த மக்களுக்கும், அரசின் நலத் திட்டங்கள் மூலமாக சுயதொழில் தொடங்கும்
வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
3. அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் சித்தார்த்தா
அறக்கட்டளையும் இணைந்து மக்கள் நலத் திட்டப் பணிகளை மேற்கொள்ளுதல்.
4. மதிப்பெண் குறைந்த கல்வித்திறன் குறைந்த மாணவ மாணவியருக்கு
தனிப்பயிற்சி வகுப்புகள், பகுதிநேர பயிற்சி வகுப்புகளாக சித்தார்த்தா அறக்கட்டளை
நடத்தி வருகிறது. அப்பணியை மென்மேலும் விரிவுபடுத்தி முழுநேரப் பயிற்சி, தொலைதூரக்
கல்விப் பயிற்சி வகுப்புகளாக செயற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
5. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்குத் தங்கும்
விடுதிகளும், உணவில்லங்களும் அமைத்துக் கொடுத்தல், ஏற்கனவே நடத்தி வருகின்ற
தாளாளர்களை ஊக்குவித்து தேவைப்படும் நல்லுதவிகளைச் செய்து கொடுத்தல். ஆங்கு
பயிலுவோர்க்கு மேற்படிப்பு மர்றும் வேலை வாய்ப்புகள் பெறுவதற்கான “வழிகாட்டும்
பயிற்சி” நல்கும்
நிறுவனங்கள் மூலமாக பயிற்சி வகுப்புகள் நடத்துதல். நலிந்த மாணவ மாணவியருக்கு
உதவித்தொகை வழங்குதல்.
6. அரசு உதவித் திட்டங்கள் மூலமாக சிறிய தொழிற்கூடங்கள்,
பயிற்சிப் பட்டறைகள் ஏற்படுத்தி உற்பத்தி, வணிகம், சந்தை விற்பனை போன்ற துறைகளில்
வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்துதல்.
7. பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு பேச்சுப்போட்டி,
இசைப்போட்டி, கதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் மற்றும்
சான்றிதழ்கள் வழங்குதல்.
8. கலை இலக்கியப் பணிகளில் ஈடுபட்டுத் தொண்டாற்றும்
ஆசிரியர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள் போன்றவர்களின் சமூகப்பணி
மென்மேலும் தொடரும் வகையில் உதவித்தொகை வழங்கி ஊக்குவித்தல்.. எழுத்தாளர்களை
ஊக்குவித்து அவர்களின் படைப்புகள் வெளிவருவதற்கான உதவிகளைச் செய்தல்.
9. ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் நிறுவி மக்கட்
பணியாற்றுதல்.
10. அமைப்பு முறை:
சித்தார்த்தா அறக்கட்டளை சமூகசேவை ஆர்வலர்கள் பங்கேற்கும்
வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணி ஓய்வு பெற்றவர்கள், தலைவர் உட்பட
பொறியாளர்கள்- நால்வர், மருத்துவர் – ஒருவர், மாவட்ட வருவாய் அலுவலர் – ஒருவர், உதவி
ஆட்சியர் –
இருவர், கூட்டுறவுத்துறை இணை இயக்குநர்கள் – இருவர், பேராசிரியர் – ஒருவர், மண்டல நன்னடத்தை அலுவலர் – ஒருவர்,
நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் – ஒருவர், தொழிலதிபர்கள் – மூவர், மத்திய
தொலை தொடர்புத்துறை அலுவலர் ஒருவர், வங்கி
அலுவலர் –
ஒருவர், ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலர் – ஒருவர், - ஆகியோர் இந்த அறக்கட்டளையில் தற்போது
உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்கள் எண்ணிக்கை 50 முதல் 100 வரை உயர்த்த
திட்டமிடப்பட்டுள்ளது.
சித்தார்த்தா
அறக்கட்டளையின் நோக்கங்களும் செயற் திட்டங்களும் செவ்வனே நிறைவேறி வெற்றிபெற சமூக
ஆர்வலர்கள் அனைவரும் தங்கள் நல்லாதரவினை அளித்திட வேண்டும் என, பணிவன்புடன்
வேண்டுகின்றோம்.
இங்ஙனம்,
சித்தார்த்தா
அறக்கட்டளை
திருச்சிராப்பள்ளி
முக்கிய அறிவிப்பு:
நமது அறக்கட்டளை சார்பாக FACE BOOK – இல் https://www.facebook.com/siddharthatrust.trichy
என்ற பெயரில் இணையதளம் கணக்கு ஒன்று திறக்கப்பட்டுள்ளது. FACE BOOK இல் இருப்பவர்களை எமது தளத்தைப் பார்வையிட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்!
என்ற பெயரில் இணையதளம் கணக்கு ஒன்று திறக்கப்பட்டுள்ளது. FACE BOOK இல் இருப்பவர்களை எமது தளத்தைப் பார்வையிட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்!
wow,its very fine.We are gowing.In the matrimonial site it requires further more detais about parents, bridegrooms and brides.
ReplyDelete