(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Showing posts with label அழைப்பிதழ். Show all posts
Showing posts with label அழைப்பிதழ். Show all posts

Tuesday, 17 January 2017

முப்பெரும் விழா (ஜனவரி 2017)



அன்புடையீர் வணக்கம்!

தங்களின் மேலான ஆதரவுடன், நமது அறக்கட்டளையின் சார்பாக நேற்று, 16.01.2017 (திங்கள்) அன்று ’சித்தார்த்தா அரங்கம்’ என்ற நமது கட்டிட வளாகத்தில் பொங்கல், திருவள்ளுவர் தினம் மற்றும் உழவர் தினம் என்ற முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. அதுசமயம் பெரியவர் திரு M.துரைசாமி (இணை இயக்குநர் ஓய்வு) அவர்களும் மற்றும் திரு A.சின்னச்சாமி (ஜெயங்கொண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அழைப்பிதழ்:

இந்த முப்பெரும் விழாவிற்கு வெளியிடப்பட்ட அழைப்பிதழ் கீழே.


விழா தொடங்கும் முன்: 

சித்தார்த்தா அரங்கத்தின் மேல்தளத்தில் விழா தொடங்கும் முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே.


திருவள்ளுவர் படத்திற்கு மாலை:

விழா தொடங்கியவுடன்,   திருவள்ளுவர் படத்திற்கு, தலைவர்,  கவிமாமணி பொறியாளர் சாந்த.முத்தைய்யா அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது பின்னர் விழாவுக்கு வந்திருந்த அனைவரும், திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். மேலும் ஒவ்வொருவரும் ஒரு குறளைச் சொன்னார்கள்.


சித்தார்த்தா அரங்கத்தில்

மேல்தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, கீழ்த்தளத்தில் (சித்தார்த்தா அரங்கத்தில்) முப்பெரும் விழாவின் ஏனைய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. 

நிறைவு

பின்னர் இனிப்பு பொங்கல் மற்றும் வெண் பொங்கலோடு உணவு பரிமாறப்பட்டது.   விழாவிற்கான ஏற்பாடுகளை IOB மேலாளர் ( ஓய்வு) திரு K சின்னசாமி B.Sc ( Agri ) (அறங்காவலர். சித்தார்த்தா அறக்கட்டளை ) அவர்கள்  சிறப்பாக செய்து இருந்தார். அவர் நன்றியரை கூற விழா இனிதே நிறைவுற்றது.


முக்கிய அறிவிப்பு: 

நமது அறக்கட்டளை சார்பாக  ஃபேஸ்புக்கில் (FACE BOOK) இல்  SIDDHARTHA TRUST TRICHY  என்ற பெயரில் இணையதளம் கணக்கு ஒன்று உள்ளது. ஃபேஸ்புக்கில் இருப்பவர்களை எமது தளத்தைப் பார்வையிட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்! https://www.facebook.com/trichysiddhartha

Friday, 1 July 2016

சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் (2016)



அன்புடையீர் வணக்கம்! நமது திருச்சி சித்தார்த்தா அறக்கட்டளை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம், வரும் ஞாயிற்றுக் கிழமை ( 03.07.2016 ) காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை அறக்கட்டளைக்குச் சொந்தமான ‘சித்தார்த்தா அரங்கம்’ – தீரன்நகரில் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள விளம்பர அறிவிப்பினைக் காணுங்கள்.

Friday, 29 April 2016

டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் 125 ஆவது பிறந்தநாள் விழா – அழைப்பிதழ்



                                  சித்தார்த்தா அறக்கட்டளை திருச்சி
                                      (பதிவு எண் : 874/ 2006)
       மனை எண் 50, விஜய நகர்,  தீரன் நகர் பின்புறம், திருச்சி.620 009


                      அண்ணல் டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் 125 ஆவது  
                                                 பிறந்தநாள் விழா  அழைப்பிதழ்


பேரன்புடையீர் வணக்கம்!

நாளது 01.05.2016 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணியளவில், மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் வடக்கு) திருச்சி.620 009 (கருமண்டபம் அருகில்) அமையப் பெற்றுள்ள ’சித்தார்த்தா அரங்கம்’ என்ற புதிய கட்டடத்தில் நடைபெற உள்ள அண்ணல் டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் 125 ஆவது  பிறந்தநாள் விழா நிகழ்ச்சியிலும்,

அதனைத் தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சிகளிலும் குடும்பத்துடன் பங்கேற்று, அறக்கட்டளையின் வளர்ச்சிக்கும், எதிர்கால திட்டங்களுக்கும் ஆலோசனை வழங்கிட வேண்டுகிறோம்.




Friday, 12 September 2014

சித்தார்த்தா அறக்கட்டளை, கட்டடத் திறப்புவிழா (14.09.2014) அழைப்பிதழ்



                   சித்தார்த்தா அறக்கட்டளை
                        திருச்சிராப்பள்ளி
               கட்டடத் திறப்புவிழா அழைப்பிதழ்

நாள்: 14.09.2014 ஞாயிற்றுக் கிழமை  நேரம்: காலை: 10.00 மணி
இடம்: எண்.50, விஜய நகர்,தீரன் நகர் (வடக்கு), திருச்சி 620 009
                       அனைவரும் வருக!