(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Friday, 6 December 2013

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 58-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் (06.12.2013)அன்புடையீர் வணக்கம்!

நமது சித்தார்த்தா அறக்கட்டளை, திருச்சி சார்பாக அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 58-ஆவது  நினைவுநாள் அஞ்சலி 06.12.2013 வெள்ளிக் கிழமை அன்று முற்பகல் அனுசரிக்கப்பட்டது.  .

டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை:

முன்னதாக டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு,  , காலை திருச்சியிலுள்ள அவரது சிலைக்கு  நமது அறக்கட்டளை சார்பாக,  கவிமாமணி பொறியாளர் சாந்த.முத்தைய்யா அவர்களின் ஆலோசனைப்படி, துணைத் தலைவர் டாக்டர் என்.சின்னையா  அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டதுநினைவு அஞ்சலி கூட்டம்:

மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்) திருச்சி, (கருமண்டபம் அருகில்) அமையப் பெற்றுள்ள நமது சித்தார்த்தா அறக்கட்டளையின் புதிய கட்டிடத்தில் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது

கூட்டத்திற்கு டாக்டர் என்.சின்னையா  அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பெரியவர் S துரைசாமி (Joint Director of Rural Administration – Retd ) அவர்கள் கலந்து கொண்டார்.
கூட்டம் தொடங்கியவுடன், முதற்கண் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு இன்று மரணம் அடைந்த தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது.

பின்னர் அண்ணல் அம்பேத்கர் படத்திற்கு  மாலை அணிவித்தல் தொடங்கி நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியர் A. நல்லுசாமி அவர்கள் வந்தவர்களை அறிமுகப்படுத்தி வரவேற்று பேசினார். கூட்டதிற்கு வந்து இருந்தவர்களும் தங்களது கருத்துக்களை கூற, சேர்மன் M சந்திரகாசன் அவர்கள் நன்றி கூறினார்.

   மதிய உணவும் நிறைவும்:
 
வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு தந்து விருந்தோம்புதல் செய்யப்பட்டது. மதிய உணவு நிகழ்ச்சிக்குப் பிறகு அஞ்சலி நிகழ்ச்சி நிறைவுற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் A. நல்லுசாமி அவர்கள் மற்றும்  IOB மேலாளர் ( ஓய்வு) திரு K சின்னசாமி B.Sc ( Agri ) (அறங்காவலர். சித்தார்த்தா அறக்கட்டளை ) அவர்கள் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தார்கள். நிகழ்ச்சியை புகைப் படங்கள் எடுத்தல் மற்றும் இண்டர்நெட்டில் இணைத்தல் முதலானவற்றை தி தமிழ் இளங்கோ அவர்கள் செய்தார்.

நினைவஞ்சலி நிகழ்ச்சியில், அறக்கட்டளையின் நிர்வாகிகள் இணைச்செயலர் திரு T K வீராசாமி, பொருளாளர் திரு A குருசாமி ஆகியோருடன், அறக்கட்டளையின் அறங்காவலர்கள் திருவாளர்கள் M சந்திரகாசன், ஆதி பெரு பழனியப்பன், பேராசிரியர் A நல்லுசாமி, அண்ணா ஏகாம்பரம், A K ராமச்சந்திரன், S நம்பியார், M ஜெகநாதன், தி தமிழ் இளங்கோ, K சின்னசாமி  ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் சிவபிச்சை, தாளக்குடி சுப்ரமணியன்,ஜெயபால் (LIC), விடிவெள்ளி பாண்டியன்,V பெர்னாட்ஷா (முசிறி), M அமுதன், திருமதி ஜானகி நல்லுசாமி, திருமதி சந்திரகாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 


முக்கிய அறிவிப்பு: 

நமது அறக்கட்டளை சார்பாக  FACE BOOK – இல்  SIDDHARTHA TRUST TRICHY  என்ற பெயரில் இணையதளம் கணக்கு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.  FACE BOOK இல் இருப்பவர்களை எமது தளத்தைப் பார்வையிட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்!


No comments:

Post a Comment