(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Wednesday, 29 October 2014

பகுதி.1 சித்தார்த்தா அறக்கட்டளை – கட்டடத் திறப்புவிழா செய்திகள்(படம் மேலே) கட்டடத்தின் முன் பக்கம்

(படம் மேலே) நுழைவு வாயிலில் அலங்காரம்

(படம் மேலே) நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட மேடை

சித்தார்த்தா அறக்கட்டளைக்கான கட்டடத் திறப்புவிழா சென்ற மாதம் செப்டம்பர்,14,2014, ஞாயிற்றுக் கிழமையன்று திருச்சி தீரன் நகரில் நடைபெற்றது. புதிய கட்டடத்தில் முந்தையநாள் இரவு வண்ண விளக்குகள், மறுநாள் வாழைப்பூவுடன் கூடிய வரவேற்பு தோரணங்கள் வழி நெடுக வண்ணக் கொடிக் கம்பங்கள் என்று விழாக் கோலத்துடன் விளங்கியது.

(படம் மேலே) காலை மங்கல இசை

(படம் மேலே) மேளதாளத்துடன் வரவேற்பு

(படம் மேலே) வரவேற்ற அன்பு நெஞ்சங்கள்

திறப்புவிழா அன்று காலை மங்கல இசையுடன் விழா இனிதே துவங்கியது. சிறப்பு அழைப்பாளர்கள் மரியாதைக்குரிய திரு A. பால்ராஜ் I.A.S அவர்களும் திரு C. செல்லப்பன் I.A.S அவர்களும் மேளதாளங்கள் முழங்க அழைத்து வரப்பட்டனர்.

(படம் மேலே) இனிய வரவேற்பு

(படம் மேலே) கல்வெட்டுக்கள் திறக்கப்படுதல்

(படம் மேலே) பந்தலில் ஒரு காட்சி

(படம் மேலே) திறக்கப்பட்ட கல்வெட்டுக்கள்


முதல் நிகழ்ச்சியாக, கட்டடத்தின் முன்பக்க சுவற்றில் பதிக்கப்பட்டு இருந்த கல்வெட்டுக்களை இருவரும் திறந்து வைத்தனர்.

(படம் மேலே) திரு A. பால்ராஜ் I.A.S அவர்கள் கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார்.

(படம் மேலே) அலுவலக அறையைத் திறந்து வைக்கும் திரு C. செல்லப்பன் I.A.S அவர்கள்

(படம் மேலே) குத்து விளக்கேற்றும் மகளிர்

பின்னர் கட்டடத்தினை திரு A. பால்ராஜ் I.A.S அவர்களும், அலுவலக அறையை திரு C. செல்லப்பன் I.A.S அவர்களும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதன் பின்னர் அலுவலகத்தினுள் மகளிர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.

(படம் மேலே) இணைச் செயலாளர் பேராசிரியர் திரு A. நல்லுசாமியின் உரை

(படம் மேலே) திறந்து வைக்கப்பட்ட தலைவர்கள் படங்கள்

மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் அரங்க நிகழ்ச்சிகள் துவங்கின. திரு கவிமாமணி பொறியாளர் சாந்த.முத்தைய்யா அவர்கள் (தலைவர்)  தலைமை தாங்கினார். பேராசிரியர் திரு A. நல்லுசாமி (இணைச் செயலாளர்) அவர்கள் நிகழ்ச்சி அனைவரையும் வரவேற்றார். பொன்னாடை போர்த்துதலுக்குப் பின்னர் அரங்கத்தினுள் இருந்த தலைவர்களது படங்கள் திறந்து வைக்கப்பட்டன.

 
(படம் மேலே) தலைவர் திரு சாந்த.முத்தையா அவர்களின் உரை

(படம் மேலே) பொதுச்செயலாளர் திரு A. கருணாகரன் அவர்களின் உரை

(படம் மேலே) இணைப் பொதுச் செயலாளர் திரு T.K.வீராசாமி அவர்களின் உரை

(படம் மேலே) பொருளாளர் திரு A. குருசாமி அவர்களின் உரை

பின்னர் திரு கவிமாமணி பொறியாளர் சாந்த.முத்தைய்யா அவர்கள் (தலைவர்)  தலைமை உரை நிகழ்த்தினார். கவிஞர் A.கருணாகரன் அவர்கள் (பொதுச் செயலாளர்) வரவேற்புரை நிகழ்த்திட  திரு T.K.வீராசாமி அவர்கள் (இணைப் பொதுச் செயலாளர்) அறிக்கை வாசித்தார். திரு A.குருசாமி அவர்கள் (பொருளாளர்) நிதிநிலை அறிக்கை வாசித்தார்.

(படம் மேலே) திரு A.பால்ராஜ் I.A.S அவர்கள் சிறப்புரை செய்கிறார்

(படம் மேலே) திரு A. பால்ராஜ் I.A.S  அவர்களுக்கு திரு சாந்த முத்தையா அவர்கள் பொன்னாடை போர்த்துகிறார்

(படம் மேலே) திரு C.செல்லப்பன் I.A.S அவர்கள் சிறப்புரை செய்கிறார்

(படம் மேலே) C. செல்லப்பன் I.A.S  அவர்களுக்கு துணைத் தலைவர் டாக்டர் N.சின்னையா அவர்கள் பொன்னாடை போர்த்துகிறார்

(படம் - மேலே) மாணவர்களுடன் அறங்காவலர் தி. தமிழ் இளங்கோ ( இணையதள ஒருங்கிணைப்பாளர்) 

சித்தார்த்தா அறக்கட்டளையின் கட்டடத் திறப்புவிழாவின் சிறப்பு அழைப்பாளர்கள் மரியாதைக்குரிய திரு A. பால்ராஜ் I.A.S , திரு C. செல்லப்பன் I.A.S ஆகிய இருவரும் சிறப்புரை ஆற்றினர்.

(படம் மேலே) விருந்தோம்பல்

(படம் மேலே) வைகை பிரபா குழுவினரின் இன்னிசை மழை

பின்னர் வாழ்நாள் சாதனையாளர்களின் அறிமுகம் மற்றும் அவர்களது சுய அறிமுகத்திற்குப் பின்னர் அவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக
பேராசிரியர் திரு A. நல்லுசாமி (இணைச் செயலாளர்) அவர்கள் சிறப்பாக செய்தார். பின்னர் வந்து இருந்த அனைவருக்கும் சுவையான மதிய உணவு அளிக்கப்பட்டது. மேலும் செவிக்கு உணவாக வைகை பிரபா இன்னிசை நிகழ்ச்சிக்குப் பிறகு விழா இனிதே முடிந்தது.

குறிப்பு:  இந்நிகழ்ச்சி பற்றிய இன்னும் செய்திகள், அதிக படங்கள் வரும் பதிவுகளில் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


No comments:

Post a Comment