அன்புடையீர் வணக்கம்!
நமது சித்தார்த்தா அறக்கட்டளை,
திருச்சி சார்பாக அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 124-ஆவது பிறந்தநாள் விழா 14.04.2014 திங்கட் கிழமை அன்று நமது கட்டட வளாகத்தில்
கொண்டாடப்பட்டது.. .
டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை:
முன்னதாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு,
14.04.2014 திங்கள் காலை திருச்சி அரிஸ்டோ ரவுன்டாணாவில் உள்ள அவரது சிலைக்கு நமது அறக்கட்டளை சார்பாக டாக்டர் சின்னையா அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா
பின்பு சுமார் 11 மணி அளவில் நமது கட்டட வளாகத்தில் திரு S.நம்பியார் அவர்கள் பாடிய புத்தம் சரணத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின
பின்னர் அரங்கினுள் புத்தர், டாக்டர் அம்பேத்கர் படங்களுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன.
பேராசிரியர் M.கோவிந்தராஜ்
( கணினித்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ) அவர்கள், கம்ப்யூட்டர் மூலம், வெண்திரையில்
குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியை பவர் பாயிண்ட் ( POWER POINT ) முறையில் உருவாக்கி வைத்து இருந்தார். அந்த படத்திறகான வெண் திரையில் உள்ள குத்து விளக்கை திருவாளர்கள் என்ஜீனியர்
சாந்த முத்தையா, முனைவர் செல்வம்
, சிவபிச்சை, டாக்டர் சின்னையா , A.கருணாகரன், T.K.வீராசாமிஆகியோர் கம்ப்யூட்டர் மவுஸ் வழியாக ஒளி ஏற்றி வைத்தனர்
பின்னர் வந்திருந்தோரின் சுய அறிமுகம் தொடங்கியது. அதன் பின்னர் திரையில் சித்தார்த்தா அறக் கட்டளை பற்றிய குறு ஆவணப்படம் ஒன்று திரையிடப்பட்டது. பேராசிரியர் A. நல்லுசாமி அவர்கள் ஆவணப்படத்திற்கான விளக்கவுரையை தந்தார்.
பின்னர் வெண்திரையில் அம்பேத்கர் – தமிழ் திரைப்படம் திரையிடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்
M.கோவிந்தராஜ் ( கணினித்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் )
தி தமிழ் இளங்கோ (S.B.I – VRS ) மற்றும் இருதயராஜ் ( ஒலி – ஒளி அமைப்பு) ஆகியோர் செய்து இருந்தனர்.
மதிய உணவிற்குப் பிறகு விழா இனிதே நிறைவுற்றது
விழாவிற்கான ஏற்பாடுகளை T.K.வீராசாமி
(பொதுச் செயலாளர்), பேராசிரியர் A. நல்லுசாமி
அவர்கள் மற்றும் திரு K சின்னசாமி B.Sc ( Agri ) (அறங்காவலர் ) அவர்கள் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தார்கள்.
வணக்கம்!
No comments:
Post a Comment