(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Thursday, 18 January 2018

புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா (2018)

 அன்புடையீர் வணக்கம்!

நமது அறக்கட்டளையின் சார்பாக நேற்று முன்தினம் (16.01.2018 – செவ்வாய்க் கிழமை) காலை, நமது  சித்தார்த்தா அரங்கம்என்ற நமது கட்டிட வளாகத்தில், புத்தாண்டு மற்றும்  பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.


அழைப்பிதழ்
இந்த விழாவிற்கான அழைப்பிதழ் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.விழா துவங்குவதற்கு முன்

(படம் மேலே) திரு சாந்த.முத்தையா மற்றும் திரு கருணாகரன்

 (படம் மேலே) திரு தாமரைச் செல்வன், திரு நல்லுசாமி, திரு சாந்த.முத்தையா மற்றும் கருணாகரன்

சித்தார்த்தா அரங்கத்தின் மேல்தளத்தில் நமது அறக்கட்டளையின் மகளிர் அணியினர். சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், பால்சாதம் மற்றும் சாம்பார் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே.


ஆன்றோர்களுக்கு மரியாதை

பின்னர் கீழ்தளத்தில் (சித்தார்த்தா அரங்கம்) கவிமாமணி பொறியாளர் சாந்த.முத்தைய்யா அவர்கள் தலைமையில் விழா தொடங்கியது. நலிவுற்ற சமுதாயம் நலம் பெறவும், வளம் பெறவும், தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஆன்றோர்கள் இருந்த படத்தின் முன் அனைவரும் கூடி மரியாதை செய்தனர்.சிறப்பு விருந்தினர்


இந்த கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக, அமெரிக்காவில் வசிக்கும் திரு P.தாமரைச் செல்வன், M.E., M.S., PhD., (USA) அவர்கள் கலந்து கொண்டார்.(படம் மேலே - முன் வரிசையில்) திருமதி & திரு பூமிநாதன், T.K.வீராசாமி
இந்த விழாவிற்கு திரு பூமிநாதன் (அட்வகேட், மதுரை ஹைகோர்ட்))) அவர்கள் தனது மனைவியுடன் வந்து கலந்து கொண்டார். கூட்டத்தின் முடிவில் திரு ராஜாமணி (Manager Retd, IOB) அவர்கள் நன்றி கூறினார்.

நிறைவு

பின்னர் இனிப்பு பொங்கல் , பால்சாதம் மற்றும் வெண் பொங்கலோடு சாம்பாரும் சேர்த்து உணவு பரிமாறப்பட்டது.   விழாவிற்கான ஏற்பாடுகளை IOB மேலாளர் ( ஓய்வு) திரு K சின்னசாமி  (அறங்காவலர். சித்தார்த்தா அறக்கட்டளை ) அவர்களும் மற்றும் திரு முத்து (TNCSC Retd) அவர்களும் சிறப்பாக செய்து இருந்தனர். 

(படம் மேலே) சித்தார்த்தா அரங்க கல்வெட்டில் உள்ள புத்தர் படம்


நமது அறக்கட்டளை சார்பாக  ஃபேஸ்புக் (FACE BOOK) இல்  SIDDHARTHA TRUST TRICHY  என்ற பெயரில் இணையதளம் கணக்கு ஒன்று உள்ளது. ஃபேஸ்புக்கில் இருப்பவர்களை எமது தளத்தைப் பார்வையிட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்!  


No comments:

Post a Comment