(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Monday, 15 September 2014

வாழ்த்துக் கவிதை! - கவிஞர் பாசிதொடர் வண்டி அஞ்சல் சேவை ( RMS) , திருச்சிராப்பள்ளியில் முதுநிலை கண்காணிப்பாளராக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர் திரு ந.சி.பாலகிருஷ்ணன் அவர்கள். இவருடைய சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆலங்குடி தாலுகாவில் உள்ள கைக்குறிச்சி என்னும் கிராமம் ஆகும். சிறந்த கவிஞரான இவர் “கவிஞர் பாசி என்ற பெயரில் கவிதைகளை படைத்து வருகிறார். இவர் தனது கவிதைகளைத் தொகுத்து “கவிக்கதிர்என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

நமது சித்தார்த்தா அறக்கட்டளை கட்டடத் திறப்புவிழாவை வாழ்த்தி ஒரு வாழ்த்து மடலை அழகு தமிழில் படைத்துள்ளார்! அந்த கவிதையின் போட்டோ வடிவம் இங்கே (கீழே)
அந்த கவிதையின் எழுத்து வடிவம் இங்கே.(கீழே)

  

சித்தார்த்தா அறக்கட்டளை கட்டிடத் திறப்புவிழா வாழ்த்து மடல்
தீரன் நகர் (வடக்கு) திருச்சிராப்பள்ளி 620 009
நாள்: 14.09.2014 ஞாயிற்றுக் கிழமை நேரம்: காலை: 10 மணி

பொன்னானநாள் இன்று பொன்னானநாள்!
பொறியாளர் மருத்துவர் வழக்கறிஞர்
பேராசிரியர் கல்வியாளர்கள் கண்மணிகள்
பேரவாக் கனவுகனிந்த பேரின்பநாள்! இன்று

சித்தார்த்தா அறக்கட்டளையின் இன்பநாள்!
சித்தமெல்லாம் குடிகொண்ட சிந்தனையாளர்களின்
சிறப்பான பணியினாலும் உழைப்பினாலும்
சிறந்து நிற்கும் வளர்ந்து நிற்கும் கட்டிடத்திறப்புவிழா! இன்று

பெருவாரியான பெருந்தகைகள் பங்களிப்பில்
பெருமைகாணும் திருவிழா! பேரின்ப மனைவிழா!
பேரும் புகழும்கொண்ட நல்லோர்களின் கரங்களின்
பேராசியோடும் வாழ்த்தோடும்திறக்கப்படும் மனைவிழா இன்று

கட்டிடம்மட்டும் திறக்கப்படவில்லை என்றும்
கட்டிக்கிடந்த மனங்களும் திறக்கப்படும் பெருவிழா!
கட்டிலடங்கா கல்விச்செல்வம் கொண்ட தலைவர்களின்
கட்டியம் கூறும் காவியவிழா! ஓவியவிழா! இன்று

கற்பி ஒன்றுசேர் புரட்சிசெயென்ற புரட்சியாளரின்
நற்கனவும் சித்தார்த்தாவின் கனிவுமிகு அன்பும்
ஒருங்கே அமைந்த இந்த அறக்கட்டளையின் விழா!
ஒருபோதும் கனவாக இல்லாமல்
காலத்தை  வென்று நிற்கும் விழா! இன்று

நல்லதொரு தலைமையில் அறங்காவலர்கள்
நல்மனம் படைத்தோர்களின் ஆதரவோடு அரிய
நல்ல செயல்புரிந்த செயல் வீரர்களை நாம் வணங்கிடுவோம்
நல்ல முறையில் கட்டிடம் மேலும் மேலும் வளர வாழ்த்திடுவோம் இன்று

கவிஞர் பாசி,
சி.பாலகிருஷ்ணன் M.A.,B.L., IPoS.,
11/1 வெற்றி இல்லம், ஸ்டாலின் நகர்,
எடமலைபட்டி புதூர் அஞ்சல்
திருச்சி 620 012 செல்: 9442549926


Friday, 12 September 2014

சித்தார்த்தா அறக்கட்டளை, கட்டடத் திறப்புவிழா (14.09.2014) அழைப்பிதழ்                   சித்தார்த்தா அறக்கட்டளை
                        திருச்சிராப்பள்ளி
               கட்டடத் திறப்புவிழா அழைப்பிதழ்

நாள்: 14.09.2014 ஞாயிற்றுக் கிழமை  நேரம்: காலை: 10.00 மணி
இடம்: எண்.50, விஜய நகர்,தீரன் நகர் (வடக்கு), திருச்சி 620 009
                       அனைவரும் வருக!
Wednesday, 3 September 2014

சிறப்புச் செய்திகள் (ஆகஸ்ட் / செப்டம்பர் 2014)10.08.14 ஞாயிறு

நமது சித்தார்த்தா அறக்கட்டளை சார்பாக , அறஙகாவலர்கள் (Trustees) மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு, ஒரு அறக்கட்டளை என்றால் என்ன, எப்படி செயல்படலாம், எவ்வெவ் வகையில் நிதி திரட்டி சமூகப் பணிகள் செய்யலாம் என்பது குறித்து சிறப்பு வகுப்பு 10.08.14 ஞாயிறு அன்று (முற்பகல்) நமது கட்டிட அரங்கத்தில் நடைபெற்றது. டாக்டர் சின்னையா அவர்கள் தலைமை தாங்கினார். திரு A கருணாகரன் அவர்கள் வரவேற்றுப் பேசினார்.

திரு C.கிருஷ்ணசாமி (காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்  (Gandhigram Rural University) ) அவர்கள் சிறப்பு பயிற்சி அளித்தார்.

(படம் மேலே) திரு C.கிருஷ்ணசாமி உரையாற்றுகிறார்

அடுத்ததாக திரு ஞானசிவம் (செயலாளர் ,மைன்ஸ் எம்ப்ளாயீஸ் பெடரேசன்) அவர்களும் சிறப்பு பயிற்சி அளித்தார்.

(படம் மேலே) திரு ஞானசிவம்  உரையாற்றுகிறார்


(படம் மேலே) பேராசிரியர் A நல்லுசாமி உரையாற்றுகிறார்
(படங்கள் -மேலே) பயிற்சி வகுப்பிற்கு வந்தவர்கள்

31.08.14 ஞாயிறு

வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி நமது அறக்கட்டளையின் கட்டிட திறப்புவிழா நடைபெற இருக்கிறது. இது விஷயமாக நமது கட்டிட அரங்கத்தில் கலந்துரையாடல் ஒன்று 31.08.14 ஞாயிறு முற்பகல் நடைபெற்றது
(படங்கள் -மேலே)  கூட்டத்திற்கு வந்தவர்கள்( படம் கீழே ) திறப்புவிழா நடைபெற இருக்கும் நமது அறக்கட்டளை கட்டிடம்.