(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Monday, 21 September 2015

IBPS Clerks 2015 இலவச பயிற்சி வகுப்புகள் - I



நமது சித்தார்த்தா அறக்கட்டளையின் சார்பாக “சித்தார்த்தா அகடமி” (SIDDHARTHA ACADEMY) என்ற இலவச பயிற்சி மையம் (FREE COACHING CENTER) அறக்கட்டளை வளாகத்தில் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இப்போது IBPS CLERK, PRELIMINARY EXAM – 2015 எனப்படும் வங்கித் தேர்வுகளுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் 12.09.2015 சனிக்கிழமை முதல் நடைபெற்று வருகின்றன. போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், அனுபவம் மிகுந்த வங்கி அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் ஆகியோரால் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி முடிய வகுப்புகள் நடைபெறும். மாணவர்களின் நலன் கருதி பயிற்சிக் கட்டணம் கிடையாது. முற்றிலும் இலவசம்.

பயிற்சி ஒருங்கிணப்பாளர்:  சி.இராஜாமணி M.Sc.,CAIIB.,
Indian Overseas Bank, Chief Manager (Retd) - Cell - 9751666600




No comments:

Post a Comment