திருச்சி சித்தார்த்தா
அறக்கட்டளையின் இணைப் பொதுச் செயலாளராக இருப்பவர். டெபுடி கலெக்டராக இருந்து பணி ஓய்வு
பெற்ற திரு T.K. வீராசாமி அவர்கள். பணி ஓய்வு பெற்ற பின்பும் இன்னும் சமூக நலத் தொண்டுகளில்,
ஆர்வம் காட்டி வரும் அவருக்கு, தனது சொந்த ஊரான தொண்டமாந்துறை (பெரம்பலூர் மாவட்டம்)
கிராமத்தில், நூலகத்துடன் கூடிய ஒரு சமுதாயக் கூடத்தை கட்டி விட வேண்டும் என்பது நீண்டநாள்
கனவாக இருந்து வந்தது.
கல்வி மைய திறப்புவிழா (14.04.18)
அண்மையில், அய்யா
T.K. வீராசாமி அவர்களது வாழ்நாள் கனவு நிறைவேறியது எனலாம். டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான
14.04.2018 (சனிக் கிழமை) அன்று அவரது சொந்த ஊரான தொண்டமாந்துறை (பெரம்பலூர் மாவட்டம்)
கிராமத்தில் ‘அண்ணல் அம்பேத்கர் நினைவு கல்வி வளர்ச்சி மையம்’ திறப்புவிழா நடைபெற்றது.
இந்த மையத்தின் பயன்பாட்டிற்காக, அய்யா அவர்கள் தனது சொந்த இடத்தை லட்சக்கணக்கில் செலவு
செய்து அமைத்துக் கொடுத்துள்ளார்.
விழாநாள் அன்று,
இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக, நமது அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் ஆ.கருணாகரன் அவர்கள் மையத்தினை திறந்து வைத்தார். பேராசிரியர் திரு A.நல்லுசாமி அவர்கள்
ரிப்பன் வெட்டி மையத்தின் பெயர்ப்பலகையை திறந்து வைத்து சிறப்புரை செய்தார்.
படம் மேலே) மைய பெயர்ப்பலகை திறப்பு
தனது சிறப்புரையில்
பேராசிரியர் அவர்கள், திரு T.K. வீராசாமி அவர்களின் சமுதாயத் தொண்டு மற்றும் அவரது
வாழ்நாள் கனவான, சொந்த ஊரில் ஒரு நூலகம் என்பது குறித்தும் பாராட்டி பேசினார். பின்னர்
திருச்சி சித்தார்த்தா அறக்கட்டளை சார்பாக, திரு T.K. வீராசாமி – திருமதி தனலட்சுமி
தம்பதியினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
(படங்கள் - மேலே)
திரு A.நல்லுசாமி சிறப்புரை மற்றும் பொன்னாடை போர்த்தும் நிகழ்ச்சி
விழாவில் போட்டிகளில்
பங்கேற்று வெற்றி பெற்ற, பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில்
உள்ளூர் கிராம மக்களும், அறக்கட்டளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். விழா முடிவில் மதிய உணவு வழங்கப்பட்டது. (அப்போது எடுத்த சில படங்கள் கீழே)
பள்ளிப் பைகள் அன்பளிப்பு (17.06.18)
மேலே நடைபெற்ற
அம்பேத்கர் நினைவு கல்வி வளர்ச்சி மைய திறப்பு விழாவினைத் தொடர்ந்து, தொண்டமாந்துறை
(பெரம்பலூர் மாவட்டம்) கிராம பள்ளி பிள்ளைகளுக்கு, பள்ளி பைகள் (SCHOOL BAGS) வழங்கும்
நிகழ்ச்சி 17.06.18 ஞாயிறு அன்று நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட சில படங்கள் கீழே
கல்வி மையத்தின் நோக்கம்:
தொண்டமாந்துறையில்
அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் நினைவு கல்வி வளர்ச்சி மையத்தின் நோக்கங்களான நல்லொழுக்கம்,
நற்பண்பு, நற்கருணை, கிராமப்புற மாணவர்கள் கல்வி முன்னேற்றம், அவர்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த நூல்கள், மடிக்கணினி,
சிடிக்கள் ஆகியவற்றுடன் ஒரு நூலகம் உள்ளது;
மேலும் இங்கு இலவசமாக பன்மொழிப் பயிற்சி, முதியோர் கல்வி, பள்ளிப் பிள்ளைகளுக்கு டியூஷன் மற்றும் அரசு - தனியார் துறைகள் நடத்தும் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுக்கான பயிற்சி அளித்தல் ஆகியவற்றிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவை அனைத்திற்குமான நிர்வாகப் பொறுப்பிற்கான செலவுகளை அய்யா T.K. வீராசாமி அவர்களே செய்து வருகிறார்.
மேலும் இங்கு இலவசமாக பன்மொழிப் பயிற்சி, முதியோர் கல்வி, பள்ளிப் பிள்ளைகளுக்கு டியூஷன் மற்றும் அரசு - தனியார் துறைகள் நடத்தும் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுக்கான பயிற்சி அளித்தல் ஆகியவற்றிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவை அனைத்திற்குமான நிர்வாகப் பொறுப்பிற்கான செலவுகளை அய்யா T.K. வீராசாமி அவர்களே செய்து வருகிறார்.
(கட்டுரை
ஆக்கம் மற்றும் பதிவேற்றம்: தி.தமிழ் இளங்கோ – படங்கள்உதவி: (நன்றியுடன்) திரு T.K.வீராசாமி )
……
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxx ……
நமது
அறக்கட்டளை சார்பாக ஃபேஸ்புக் (FACE
BOOK) இல் SIDDHARTHA TRUST TRICHY என்ற பெயரில் இணையதளம் கணக்கு ஒன்று
உள்ளது. ஃபேஸ்புக்கில் இருப்பவர்களை எமது தளத்தைப்
பார்வையிட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்!