அன்புடையீர் வணக்கம்!
தங்களின் மேலான ஆதரவுடன், நமது அறக்கட்டளையின் கல்வி மற்றும் பல்நோக்கு சமுதாயக்கூடம் தரைத்தளம் கட்டி முடியும் நிலையில் உள்ளது. இத்தருணத்தில் புதிய கட்டிடத்தை அனைவரும் காணும் வாய்ப்பாகவும் அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 123 – ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் 14.04.2013 ( ஞாயிறு ) அன்று கட்டிட வளாகத்தில் கலந்துரையாடல் விழா கூட்டம் நடைபெற்றது.
டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை:
முன்னதாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு,
14.04.2013 ஞாயிறு காலை திருச்சியிலுள்ள அவரது சிலைக்கு நமது அறக்கட்டளை சார்பாக கவிமாமணி பொறியாளர் சாந்த.முத்தைய்யா அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
கலந்துரையாடல் கூட்டம்:
நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் புத்தம்
சரணத்துடன் தொடங்கியது. பேராசிரியர் M.கோவிந்தராஜ் ( கணினித்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ) அவர்கள், சித்தார்த்தா அறக்கட்டளை பற்றிய ஒரு குறு ஆவணப்படம் ஒன்றை பவர் பாயிண்ட் (
POWER POINT ) முறையில் உருவாக்கி வைத்து இருந்தார். அந்த படத்திறகான வெண் திரையில் உள்ள குத்து விளக்கை நமது தாய்மார்கள் கம்ப்யூட்டர் மவுஸ் வழியாக ஒளி ஏற்றி வைத்தனர். பின்னர் அரங்கினுள் புத்தர், டாக்டர் அம்பேத்கர் படங்களுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன. அதன் பின்னர் திரையில் சித்தார்த்தா அறக் கட்டளை பற்றிய குறு ஆவணப்படம் திரையிடப்பட்டது. பேராசிரியர் A. நல்லுசாமி அவர்கள் ஆவணப்படத்திற்கான விளக்கவுரையை தந்தார்.
மதிய உணவு:
வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு தந்து விருந்தோம்புதல் செய்யப்பட்டது. YRC KITCHEN கேட்டரிங் சர்விஸ் அமைப்பினர் சிறப்பான முறையில் சமையல் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
நிறைவு:
மதிய உணவு நிகழ்ச்சிக்குப் பிறகு விழா இனிதே நிறைவுற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் A. நல்லுசாமி அவர்கள் மற்றும் IOB மேலாளர்
( ஓய்வு) திரு K சின்னசாமி B.Sc ( Agri ) (அறங்காவலர். சித்தார்த்தா அறக்கட்டளை ) அவர்கள் , ஆகியோர் சிறப்பாக செய்து
இருந்தார்கள்.
நமது அறக்கட்டளை சார்பாக FACE BOOK – இல் SIDDHARTHA TRUST TRICHY என்ற பெயரில் இணையதளம் கணக்கு ஒன்று திறக்கப்பட்டுள்ளது. FACE BOOK இல் இருப்பவர்களை எமது தளத்தைப் பார்வையிட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்!