(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Sunday, 13 November 2011

அன்புடையீர்! வணக்கம் !


தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருச்சி மாநகரில் நலிவுற்ற மக்களின் சமூக,பொருளாதார,கல்வி மேம்பாட்டிற்கென உருவாக்கப்பட்டது தான் சித்தார்த்தா அறக்கட்டளை.2006-ஆம் ஆண்டு பதிவு செய்யப் பட்டு(பதிவு எண் 874/2006) வாடகை கட்டிடத்தில் பிராட்டியூரில் இயங்கி வந்தது. தற்போது திருச்சி,கருமண்டபம் நெ.2 வ.உ.சி நகரில் இயங்கி வருகிறது

சித்தார்த்தா அறக்கட்டளை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். இது அரசியல், சாதி, மத, கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டு சமூகத்தில் அடித்தட்டில் உள்ள மக்களின் கல்வி,பொருளாதார மேம்பாட்டிற்காக பாடுபட்டு வரும் நிறுவனம் ஆகும்.

சித்தார்த்தா அறக்கட்டளையின் தற்போதைய அறங்காவலர்களின் நிதியளிப்பை மூலதனமாகக் கொண்டு, திருச்சி மாநகர எல்லைக் கோட்டினை ஒட்டி தீரன் நகர் பின்புறம் விஜய நகரில் இதன் அலுவலகம், கல்வி வளாகம் மற்றும் பல்நோக்கு தொழிற்கூடம் அமைக்க 3600 சதுர அடி நிலம் சொந்தமாக விலைக்கு வாங்கப் பட்டுள்ளது.

இந்த இடத்தில் முதல் கட்டமாக, பல்நோக்கு சமூகக் கூடமும், தொழிற் கூடமும் கொண்ட 3 அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டி, அதில் சுய வேலை வாய்ப்பினை உருவாக்கவும், தொழிற்பயிற்சி, கணினி பயிற்சி, செவிலியர் பயிற்சி முதலியன நடத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது.

நமது நிறுவனத்தின் செயல் திட்டங்கள் நிறைவேற சமூக ஆர்வலர்களின் முழுமையான ஒத்துழைப்பும் பங்களிப்பும் தேவை என்பதால் தங்களையும் இந்த அறக்கட்டளையுடன் இணைத்துக் கொள்ளுமாறு கனிவுடன் வேண்டுகின்றோம்.

  பணம் இருந்தால் பாதி வெற்றி கிட்டும்.
  மனம் இருந்தால் நமது நோக்கம் முழு வெற்றி
  அடையும்.


என்பதால் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை நல்குமாறு மீண்டும் கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம். ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். இது நம்மால் சுமக்க முடியாத சுமையும் அல்ல. இழப்பும் அல்ல.

       எழுகின்றவரோடு கைகோர்த்திடு நீயும் எழுவாய்
   விழுகின்றவனுக்கு கை கொடு அவனும் எழுவான்!

என்ற உயரிய நோக்கினை மெய்ப்பிக்கும் வகையில் எழுகின்ற சித்தார்த்தா அறக்கட்டளையுடன் கை கோர்த்திடுங்கள்.வெற்றி பெறுவோம்.
இன்னனம்,
தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 
சித்தார்த்தா அறக்கட்டளை,திருச்சிராப் பள்ளி.



(இந்த இணையதளத்தை பார்வையிடும் அன்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களை கருத்துரைப் பெட்டியில் (Comments Box)  தரலாம் அல்லது எங்களது மின்னஞ்சல் trichysiddhartha@gmail.com முகவரிக்கு அனுப்பலாம்.)