(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Friday, 16 December 2016

பௌத்தம் தழுவிய பண்பாளர்களுக்கு பாராட்டு விழாதிருச்சியில், இந்த மாதம் 13.12.2016 செவ்வாய்க் கிழமை மாலை 6.00 மணியளவில், முழு பௌர்ணமி விழாவும் பௌத்தம் தழுவியவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. இதுபற்றி தெரிந்து கொள்ளும் முன்னதாக சென்னையில் நடந்த இதற்கு முன்னோடியான விழா பற்றி தெரிந்து கொள்வோம். 

சென்னையில் நடந்த விழாவும் செய்தியும் தகவலும்

தாய் மதம் திரும்பிய 50 மருத்துவர்கள்

// 16 அக்டோபர் 2016 பௌத்தத்தின் எழுச்சி வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும் என்றால் மிகையில்லை."மக்கள் மருத்துவர்கள்" என்ற அமைப்பு சுமார் 5 மாதங்களுக்கு முன் 8 பேர் கொண்ட மருத்துவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. தகவல் தொடர்பு வசதிகளினால் இப்போது 400 மருத்துவர்களுக்கு மேலாய் ஒன்றிணைந்துள்ளனர்.
  
அவர்களின் பல விவாதங்களுக்கு பிறகு, அண்ணல் அம்பேத்கரின் வழியில் தீண்டாமையிலிருந்து விடுபட, தாய்மதமான பௌத்தம் திரும்புவதே சரியான வழி என்று முடிவெடுத்து 48 மருத்துவர்கள் தங்கள் குடும்பத்துடன் ( மனைவி, பிள்ளைகள் ) பௌத்தமேற்க்கும் நிகழ்வை 16 அக்டோபர் 2016 அன்று நிகழ்த்துவதாய் முடிவெடுத்தனர்.

அதன்படி நிகழ்ச்சி கிட்டத்தட்ட 09:30 மணியளவில் தொடங்கியது மேடையை பேராசிரியர் பி.டி.சத்யபால், தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன், பௌத்த துறவி வெண் தம்மனாக், மருத்துவர் ஜெயராமன் ஆகியோர் அலங்கரித்தனர். மக்கள் மருத்துவக் குழு பற்றிய சிறு  விளக்கத்திற்குப் பின், பேராசிரியர் பி.டி.சத்யபாலின் உரை அரங்கேறியது

உணவு இடைவேளைக்குப் பின், பௌத்தம் பற்றிய சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது. அதன் பின், நிகழ்ச்சியின் முத்தாய்ப்பான மூன்று நிகழ்வுகள் நடந்தேறின.

அண்ணல் அம்பேத்கரின் பௌத்தமேற்பு பற்றிய 6 உரைகள் அடங்கிய புத்தகத்தை "நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்" என்று தலைப்பிட்டு தலித் முரசு வெளியிட்டது. விழாக் குழுவின் பங்களிப்பால் ரூ.150/- விலையிலான அப்புத்தகம் ரூ.50/- க்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 72 நபர்கள் பௌத்தம் ஏற்கும் நிகழ்வு நடந்தேறியது.

அதன் பிறகு பாபாசாகேப் டாக்டர்.அம்பேட்கரின் எழுத்துக்களை தமிழில் படிக்கும் வண்ணம் மக்கள் மருத்துவர்கள்  குழுவால் உருவாக்கப்பட்ட ஆன்டிராய்டு ஆப்பான "BLUE BUDDHAவெளியிடப்பட்டது. இதில் மொத்தமுள்ள 37 தொகுதிகளில் முதல்கட்டமாக 10 மட்டும் படிக்க கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஒரு சமூகத்தில் கற்றறிந்த மருத்துவர்களின் செயல்கள் கூர்ந்து கவனிக்கப்படும்.  அவர்களின் இத்தகைய தாய் மதம் திரும்புதலால், ஒடுக்கப்பட்ட இனத்தை சார்ந்த அடித்தட்டு மக்களுக்கு பௌத்தத்தின் பால் கவனம் திரும்பும் என்றால் மிகையில்லை.  இந்த நிகழ்வின் மூலம் அது சாத்தியமாகும் என்றே எண்ணலாம். மேலும் இந்த நிகழ்வைப் பற்றிய செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது முதல் பக்கத்திலேயே செய்தியை வெளியிட்டு சிறப்பித்தமை கூடுதல் சிறப்பு .//

நன்றிடன் - மேலும் அதிக விவரங்களுக்கு – சாக்ய சங்கம்  http://www.sakyasangham.in/2016/10/Makkal-Medical-Team-Embraced-Buddhism.html

திருச்சியில் நடந்த பாராட்டு விழா:

மேலே சொன்ன, 48 மருத்துவர்கள் தங்கள் குடும்பத்துடன் ( மனைவி, பிள்ளைகள் ) பௌத்தமேற்கும் நிகழ்வில் (Makkal Medical Team Embraced Buddhism ) தங்கள் குடும்பத்தாருடன் பௌத்தம் தழுவிய. மரியாதைக்குரிய

டாக்டர் N.பெரியசாமி – டாக்டர் ஹேமமாலினி (திருச்சி)
டாக்டர் K.கல்யாணசுந்தரம் – Er A.S. மாலதி (திருச்சி)
டாக்டர் கோவிந்தராஜ்  – டாக்டர் சசிபிரியா (திருச்சி)
டாக்டர் அறிவழகன் டைகோ – Er. ஜான்சிராணி டைகோ (பெரம்பலூர்)

ஆகிய மருத்துவர்கள் குடும்பத்தினருக்கு, 13.12.2016 செவ்வாய்க் கிழமை மாலை 6.00 மணியளவில், மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் வடக்கு) திருச்சி.620 009 (கருமண்டபம் அருகில்) அமையப் பெற்றுள்ள ’சித்தார்த்தா அரங்கம்’ என்ற நமது புதிய கட்டடத்தில், நமது சித்தார்த்தா அறக்கட்டளை சார்பாக,  பாராட்டுவிழா நடந்தது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே.கீழேயுள்ள புகைப்படங்கள் திரு K.சசிகுமார் (அரியலூர்) அவர்களது ஃபேஸ்புக்கிலிருந்து எடுக்கப்பட்டவை. அன்னாருக்கு நன்றி.

Wednesday, 14 December 2016

சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் ( 03.ஜூலை.2016)நமது திருச்சி சித்தார்த்தா அறக்கட்டளை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம், 03. ஜூலை 2016 ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை அறக்கட்டளைக்குச் சொந்தமான ‘சித்தார்த்தா அரங்கம்’ – தீரன்நகரில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே.(படங்கள் – மேலே) சித்தார்த்த அரங்க வாசலில்

(படம் – மேலே) பயனாளிகள் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன


(படங்கள் – மேலே) மக்கள் வரிசை


(படங்கள் – மேலே) கண் மருத்துவர்கள் பரிசோதனை

(படங்கள் – கீழே) செவிலியர்கள் உதவி(படங்கள் – கீழே) அறுவை சிகிச்சை பயனாளிகளை, மதுரைக்கு அழைத்துச் செல்ல வந்த, அரவிந்த் கண்மருத்துவமனை வேன்